விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்து வரும் பணவீக்கம், தொடர்ந்து குறைந்து வரும் வெளிநாட்டு இருப்புகள் என பல காரணிகளுக்கு மத்தியில் இலங்கை பெருத்த கடன் பிரச்சனையில் தத்தளித்து வருகின்றது.
பெரும் பணவீக்கத்தினால் தத்தளித்து வரும் இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடி, அரசியல் பிரச்சனைகளுக்கு மத்தியில் பாகிஸ்தான், பொருளாதாரத்தில் நெருக்கடியினை காணத் தொடங்கியுள்ள நேபாளம் என ஒவ்வொரு நாடும் பெரும் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளன.
தமிழ்நாட்டின் புதிய டார்கெட்.. 5 வருடத்தில் 10000 ஸ்டார்ட்அப்..!
இந்த நாடுகளில் விலைவாசி அதிகரிப்பு, பணவீக்கம், பொருளாதார நெருக்கடி,வெளிநாட்டு இருப்புகள் சரிவு என்பது பொதுவான விஷயங்களாக இருந்தாலும், அதனையும் தாண்டி, ஒரு பொதுவான விஷயம் கவனிக்க வேண்டியுள்ளது எனில், அது சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம் தான்.
பொதுவான காரணம்
இன்றைய நாளில் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில், அந்த நாடுகளின் ஆட்சி எந்த நேரத்தில் கவிழுமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணமாக பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் , விலைவாசி அதிகரிப்பு என மேலோட்டமாக கூறினாலும், அதற்கு முக்கிய காரணம் சீனா என்றும் ஒரு தரப்பு கூறுகின்றது. அதாவது சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
கடன் பொறி ராஜதந்திரம்
சீனாவின் கடன் பொறி ராஜதந்திரம் என்று கூறப்படும் திட்டம், உலக நாடுகளை கடன் வலையில் சிக்க வைக்க, சீனாவினால் போடப்பட்ட ராஜதந்திர நடவடிக்கை என்றும் கூறப்படுகின்றது.
சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் 2013ம் ஆண்டில் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தினை செயல்படுத்துவதாக அறிவித்தார். இந்த திட்டமானது மேற்கத்திய நாடுகளுக்கும், ஆசிய நாடுகளுக்கும் இருக்கும் வர்த்தக பற்றாக்குறையை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் கூறப்பட்டது.
பெல்ட் அண்ட் ரோடு திட்டம்
சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் மூலம், உலக நாடுகள் பலவற்றையும் தங்கள் நாட்டுடன் சீனா இணைக்கும். இதன் மூலம் சாலை போக்குவரத்தினை அண்டை நாடுகளுடன் மேம்படுத்தும். கப்பல் போக்குவரத்தினையும் மேம்படுத்தி சீனாவின் துறைமுகங்களை உலக நாடுகளுடன் இணைக்கும். பொதுவாக சொல்ல வேண்டுமெனில் சீனாவின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், சாலை மார்க்கம் என அனைத்து தரப்பினையும் அண்டை நாடுகளுடன் சீனா இணைத்துக் கொள்ளும்.
கட்டுபாட்டில் வைத்துக் கொள்ளலாம்
இதன் மூலம் உலக நாடுகள் எளிதில் தங்களது சரக்கு போக்குவரத்தினை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் சீனா பல நாடுகளையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும் என நம்புகிறது. ஆனால் சீனாவோ இந்த திட்டத்தில் சீனாவுக்கு எந்த தனிப்பட்ட நோக்கமும் கிடையாது என கூறி வருகின்றது. உலகளாவிய நாடுகள் மேம்படும் போது, அதில் சீனாவும் மேம்படும் என்றும் கூறி வருகின்றது. ஆனால் இதன் பின்னணியில் சீனாவின் இராஜதந்திரம் இருக்குமோ என்ற அச்சம் தொடர்ந்து இருந்து வருகின்றது.
கடன் கொடுக்கிறோம்
இந்த BRI திட்டத்தினை செயல்படுத்த அண்டை நாடுகளுக்கு சீனா கடன் கொடுப்பதாகவும் தெரிவித்தது. எனினும் இதற்காக அண்டை நாடுகள் தங்க பத்திர உத்தரவாதத்தில் கையெழுத்திட வேண்டும். உதாரணத்திற்கு பாகிஸ்தானுக்கு பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு பெரும் தொகை கடனாக வழங்கப்பட்டது. இதேபோல இந்த திட்டத்தில் ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான் வழியாக மேற்கு நோக்கியும், மலேசியா, ஹாங்காங், வட கொரியா என கிழக்கு நோக்கியும், இலங்கை வழியாக தெற்கிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
தேவையானதை கொடுக்கும்
சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு கடன் மட்டும் அல்ல, தேவையான தொழில் நுட்பங்கள், மனித வளங்கள் என அனைத்தும் தருவதாக சீனா ஒப்புக் கொண்டுள்ளது. எனினும் இது குறித்தான ஒப்பந்தங்கள் எதுவும் வெளிப்படையாக இல்லை என்பதே அண்டை நாடுகளுக்கு அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதில் வட்டி விகிதமும் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
கடன் பொறி இராஜதந்திரம்
இந்த திட்டத்தில் தான் 70 நாடுகள் முதலீடு செய்ய ஒப்புக் கொண்டுள்ளன. ஒரு புறம் இதன் மூலம் உலகளாவிய வணிகத்தினை மேம்படுத்த முடியும் என்றாலும், அமெரிக்காவும், இந்தியாவும் இதனை ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனை அமெரிக்கா கடன் பொறி இராஜதந்திரம் என்றும் விவரித்து வருகிறது. ஏனெனில் இது வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிக கடனை கொடுத்து, கடனை கட்ட முடியாமல் தவிக்கும்போது அந்த நாட்டின் வளங்களை பறிக்கும் மோசமான செயல் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் ஏழை நாடுகளை கடன் வலையில் விழவைத்து அதன் மூலம் அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் எனவும் கூறப்படுகிறது.
நினைவுகூற வேண்டிய விஷயம்
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் 2020ம் ஆண்டு, ஒரு கூட்டத்தில் சீனாவின் ராஜ தந்திரத்தினை பற்றி பேசியிருந்தார். வளர்ச்சி கூட்டாண்மை என்ற பெயரில் நாடுகள் சார்பு கூட்டாண்மைக்கு தள்ளப்பட்டுள்ளதை வரலாறு நமக்கு கற்பித்துள்ளது என கூறியிருந்தார்.
இலங்கையின் வீழ்ச்சிக்கு காரணம் சீனாவா?
சீனாவின் BRI திட்டம் இலங்கை அரசினை வீழ்ச்சியடைய செய்தது. கடனை திரும்ப செலுத்துவதில் எந்த சலுகையையும் சீனா வழங்க மறுத்துவிட்டது. சீனாவுக்கான மொத்த கடன் விகிதம் 8 பில்லியன் டாலராகும். இது இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் ஆறில் ஒரு பங்காகும் என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகின்றது.
இலங்கைக்கு கைகொடுக்கவில்லை
சீனாவின் கடனுடன், அதன் கட்டுமான திட்டங்களும் பெரியதாக எதுவும் சம்பாதிக்கவும் இல்லை. இதற்கிடையில் இலங்கையின் கையிருப்பும் கரைந்து வருகின்றது. அதே நேரம் சீனா கடனை மறுசீரமைப்பு செய்யவில்லை. லாபமற்ற ஒரு முதலீட்டு திட்டத்திற்கு கடன் வாங்கியது, இலங்கையினை மேற்கொண்டு நெருக்கடிக்கு தள்ளியது.
பாகிஸ்தானிலும் பிரச்சனை தான்
பாகிஸ்தானிலும் இதே நிலை தான். பாகிஸ்தானில் BRI திட்டத்திற்காக 27.3 பில்லியன் டாலர்கள் கடனுதவியையும் வழங்கியுள்ளது. ஏற்கனவே கடன் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தானில், கொரோனா இன்னும் நிலைமையை மோசமாக்கியது. தற்போது அங்கும் ஆட்சி கவிழும் நிலையே இருந்து வருகின்றது. மொத்தத்தில் இதுபோன்ற பல நாடுகளில் தனது திட்டத்தினை விரிவுப்படுத்தியுள்ளது சீனா. இதில் லாவோஸ், ஜாம்பியா, கிர்கிஸ்தான் உள்ளிட்டவையும் அடங்கும்.
இவ்வளவு திட்டங்களா?
இதில் 13,000-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு, சுமார் 843 பில்லியன் டாலரினை கடன் திட்டங்களை ஆய்வு செய்துள்ளதாகவும், இது 165 நாடுகளில் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதில் கவனிக்கதக்க நல்ல விஷயம் என்னவெனில் நேபாளில் ஒரு திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை. ஆக நேபாளம் இதுவரையில் கடன் பிரச்சனையில் சிக்கவில்லை.
நேபாளின் எதிர்பார்ப்பு
எனினும் மானிய உதவிகளின் மூலம் திட்டங்களை தேடுவதாக தெரிவித்துள்ளது. அதோடு கடன் வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் அப்படியே கடன் வாங்கினாலும் அதற்கு 2% மேலாக வட்டி இருக்க கூடாது என்றும் கூறியுள்ளது. அதேபோல திரும்ப செலுத்தும் காலமும் ஆசிய வளர்ச்சி வங்கி அல்லது உலக வங்கி வழங்கும் அவசாகத்தினை போல் இருக்க வேண்டும் என கோரியுள்ளது.
சிக்கலில் நேபாள்
எனினும் சமீப காலமாக நேபாளில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதியும் 14.7% குறைந்துள்ளது. அதே போல முன்னறிவிப்பு ஏதும் இன்று சமீபத்தில் சீனா நேபாளில் முற்றுகை நடவடிக்கையை எடுத்தது. இதற்கிடையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை என்று பேரில், சீனா நேபாள் வர்த்தகர்களுக்கு தடை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் நேபாளை வணிக ரீதியாக் ஒடுக்கும் நடவடிக்கையிலும் மறைமுகமாக சீனா ஈடுபட்டிருக்கலாமோ என்ற அச்சத்தினை எழுப்பியுள்ளது.
இந்தியாவில் என்ன பிரச்சனை
இந்தியா தற்சார்பு இந்தியாவினை வலுப்படுத்த விரும்புகிறது. அதற்காக நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. எனினும் அண்டை நாடான இலங்கையிலும் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றது. நேபாளுக்கும் உதவிகளை செய்து வருகின்றது. மேற்கொண்ட செயல்பாடுகளை கவனிக்கும்போது, இந்தியாவுக்கு எந்தமாதிரியான பிரச்சனையை சீனா கொடுக்க போகிறதோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
china’s debt trap diplomacy in the region: how it impact in india
china’s debt trap diplomacy in the region: how it impact in india/சீனாவின் கடன் பொறி இராஜதந்திரம்.. இந்தியாவிடம் செல்லுபடியாகுமா.. !