சென்னை-யில் ஐபோன்13 உற்பத்தியை துவங்கிய ஆப்பிள்.. விலை குறையுமா..?!

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமான ஆப்பிள், தனது உற்பத்தி தளத்தைச் சீனாவில் இருந்து இந்தியாவிற்கும் மாற்றிய நிலையில், பல மாடல் போன்களைத் தயாரித்து இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏற்றுமதி செய்து விற்பனை செய்து வருகிறது.

இதுநாள் வரையில் பழைய ஸ்மார்ட்போன் மாடல்களை மட்டுமே இந்தியாவில் தயாரித்து வந்த ஆப்பிள், தற்போது உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வரும் லேடெஸ்ட் மாடலான ஐபோன் 13 சீரியஸ் போன்களைத் தயாரிக்கத் துவங்கியுள்ளது.

ஐபோன் உற்பத்தி நிறுத்தம்.. ஆப்பிள் முடிவால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஆப்பிள்

ஆப்பிள்

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆப்பிள் நிறுவனம் நேரடியாக உற்பத்தியில் இறங்குவது இல்லை, இதற்கு மாறாகப் பல ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்கள் உடன் இணைந்து ஐபோன் உட்பட அனைத்து எலக்ட்ரானிக்ஸ் கருவிகளைத் தயாரித்து வருகிறது.

சென்னை பாக்ஸ்கான்

சென்னை பாக்ஸ்கான்

இந்நிலையில் சென்னையில் இயங்கி வரும் ஆப்பிள் உற்பத்தி கூட்டணி நிறுவனமான, பாக்ஸ்கான் தொழிற்சாலையில் A15 பயோனிக் சிப் கொண்ட ஐபோன் 13 ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் பணிகளைத் துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

 சென்னை உற்பத்தி
 

சென்னை உற்பத்தி

சென்னை உற்பத்தி மூலம் தனது வர்த்தகம் பெரிய அளவில் அதிகரிக்கும் என்பது மட்டும் அல்லாமல் மீண்டும் ஸ்மார்ட்போன் விற்பனையில் இழந்த முதல் இடத்தைப் பிடிக்க முடியும் என நம்புகிறது. சென்னை தொழிற்சாலையில் உற்பத்தி அதிகரித்துள்ளது மூலம் ஐபோன்13 மாடல் போன்கள் விலை குறையக் குறைந்தபட்ச வாய்ப்புகள் மட்டுமே உள்ளது.

ஐபோன்13 மாடல் போன்

ஐபோன்13 மாடல் போன்

ஐபோன்13 உற்பத்தி மூலம் இந்தியாவில் அனைத்து மாடல் போன்களும் தயாரிக்கப்படுகிறது, சில மாதங்களுக்கு முன்பு ஆப்பிள் நிறுவனனம் தனது விஸ்திரான் இந்திய தொழிற்சாலையில் ஐபோன்13 உற்பத்தி துவங்கிய நிலையில் தற்போது சென்னை பாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி துவங்கப்பட்டு உள்ளது. விரைவில் பெகாட்ரன் தொழிற்சாலையில் உற்பத்தி துவங்க உள்ளது.

2017 முதல் உற்பத்தி

2017 முதல் உற்பத்தி

ஆப்பிள் நிறுவனம் 2017ல் ஐபோன் எஸ்ஈ மாடல் போன் உடன் இந்தியாவில் உற்பத்தி துவங்கி ஐபோன் 11, ஐபோன் 12, ஐபோன் 13 எனத் தொடர்ந்து அடுத்தடுத்து புதிய போன்களைத் தயாரிக்கத் துவங்கியுள்ளது. ஐபோன் ப்ரோ மாடல் போன்களை இந்தியாவில் தயாரிப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 70 லட்சம் போன்கள்

70 லட்சம் போன்கள்

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 4 ஐபோன்களில் 3 ஐபோன் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இப்புதிய ஐபோன் 13 உற்பத்தி மூலம் 100% விற்பனையும் உள்நாட்டு உற்பத்தியாக உயரலாம். 2022ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 70 லட்சம் போன்கள் விற்பனை சந்தைக்குள் வந்து 5.5 சதவீத சந்தையை வைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Apple starts iPhone 13 production at Chennai Foxconn plant

Apple starts iPhone 13 production at Chennai Foxconn plant Apple starts iPhone 13 production at Chennai Foxconn plant சென்னையில் ஐபோன்13 உற்பத்தியை துவங்கிய ஆப்பிள்.. விலை குறையுமா..?!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.