அகமது
இயக்கத்தில் ஜன கன மன படத்தில் நடித்து வந்தார்
ஜெயம் ரவி
. கொரோனா வைரஸ் பிரச்சனையால் அந்த படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. ஜன கன மன வேலை முடியும் முன்பே மற்றொரு படத்தில் அகமதுவும், ஜெயம் ரவியும் சேர்ந்து வேலை செய்யப் போகிறார்கள்.
அந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக
நயன்தாரா
நடிக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் அந்த படத்திற்கு குறைந்த சம்பளத்தில் நடித்துக் கொடுக்கிறார் ஜெயம் ரவி.
இந்நிலையில் நயன்தாரா கேட்ட சம்பளம் தான் அனைவரையும் அதிர வைத்திருக்கிறது. 20 நாட்கள் கால்ஷீட் கேட்டதற்கு ரூ. 10 கோடி கேட்டாராம் நயன்தாரா.
அவர் வழக்கமாக ஒரு படத்திற்கு ரூ. 5 கோடி கேட்பார். இந்நிலையில் ஜெயம் ரவி படத்திற்கு தன் சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்திவிட்டார். இது குறித்து தான் கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசுகிறார்கள்.
படப்பிடிப்பு ஏப்ரல் 19ம் தேதி சென்னையில் துவங்கவிருக்கிறது. முன்னதாக தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து நடித்தார் நயன்தாரா. ஆனால் அந்த படத்தில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று விமர்சனம் எழுந்தது.
திருமணமான பிரபல இயக்குநரால் கர்ப்பமாகி, கருவை கலைத்தேன்: நடிகை பகீர்