சென்னை: தனியார் பள்ளிகளில் கட்டணமின்றி எல்கேஜி படிப்புக்கு வரும் 20ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25சதவிகிதம் ஏழை மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் மாணாக்கர்களின் கல்வி கட்டணத்த அரசே செலுத்துகிறது. அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான எல்கேஜி மாணாக்கர்கள்சேர்க்கை வரும் 10ந்தேதி முதல் தொடங்குகிறது. இந்த கோட்டாவில் சேரும் மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக தனியார் பள்ளிகளில் படிக்கலாம்
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனியார் பள்ளியில் எல்கேஜி வகுப்புகளில் இலவசமாக சேர விரும்புவோருக்கு வருகின்ற 20-ஆம் தேதி முதல் ஆன்லைன் பதிவு தொடங்குகிறது. மாணவர்களுக்கான விண்ணப்பங்களை rte.tnschools.gov.in எனும் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் எனவும், வருகிற மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் மெட்ரோ பள்ளி இயக்குநரகம் அறிவித்துள்ளது.