தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7500 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும் என்பது உட்பட 34 புதிய அறிவிப்புகளைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டாயிரத்து 713 நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆறாயிரத்து 29 உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலமொழி ஆய்வகங்களும், சென்னையில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத் தரத்திலான செம்மைப் பள்ளியும் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.