விஜய்
பீஸ்ட் படத்திற்கு பிறகு
வம்சி
இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கின்றார்.
பீஸ்ட்
படப்பிடிப்பின் போதே தளபதி 66 படத்தின் அறிவிப்பு வெளியானது. எப்படி விஜய் மற்றும்
நெல்சன்
கூட்டணி யாரும் எதிர்பார்க்காத கூட்டணியாக அமைந்ததோ அதைப்போலத்தான் வம்சி மற்றும் விஜய்யின் கூட்டணியும் அமைந்துள்ளது.
விஜய்யின் 66 ஆவது படத்தை இயக்குவதாக பல இயக்குனர்களின் பெயர் அடிபட்ட நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக தோழா படத்தை இயக்கிய வம்சி விஜய்யுடன் கைகோர்த்தார். தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக திகழும் தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார்.
இதுல இவ்ளோ விஷயம் இருக்கா ? விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி..!
சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. தளபதி 66 படத்தில் நாயகியாக ராஷ்மிகா நடிக்க தமன் இசையமைக்கின்றார். இந்நிலையில் தளபதி 66 படத்தை இயக்குவது தெலுங்கு திரையுலகை சார்ந்த இயக்குனர் மேலும் தயாரிப்பதும் தெலுங்கு திரையுலகை சார்ந்தவர் என்பதால் இது ஒரு தெலுங்கு படமாக இருக்கும் என சில ரசிகர்கள் கருதி வந்தனர்.
தளபதி 66
ஆனால் தளபதி 66 ஒரு தமிழ் படம்தான் என்று விஜய் நேர்காணலில் தெரிவித்தார். தளபதி 66 தமிழ் படமா இல்லை தெலுங்கு படமா என நெல்சன் கேள்விகேட்க அதற்கு விஜய் தளபதி 66 தமிழ் படம் தான் என பதிலளித்தார்.
விஜய்
மேலும் இயக்குனர் வம்சி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு நேரடி தமிழ் படம் எடுக்கத்தான் விரும்பினார்கள். எனவே தளபதி 66 முழுக்க முழுக்க தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப தமிழ் படமாகத்தான் உருவாகும். அதன் பின் டப் செய்யப்பட்டு தெலுங்கில் வெளியாகும் என விஜய் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதிகளின் சந்திப்பில் இத கவனிச்சீங்களா?