தூள் கிளப்பிய டிசிஎஸ்.. Q4ல் ரூ.9926 கோடி லாபம்.. பங்குதாரர்களுக்கும் ஜாக்பாட்..!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் (TCS), இன்று அதன் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது.

அதன்படி 4வது காலாண்டில் அந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் 7.3 சதவீதம் அதிகரித்து, 9926 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்த நிறுவனம் முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 9246 கோடி ரூபாய் லாபத்தினை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே முந்தைய காலாண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் 9769 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு BMW கார் பரிசு.. சென்னையிலுள்ள ஐடி நிறுவனம் அதிரடி..!

வருவாய் விகிதம்

வருவாய் விகிதம்

இதே வருவாய் விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும் 16 சதவீதம் அதிகரித்து, 50,591 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 43,706 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்ல்கது.

இது வங்கித் துறை மற்றும் நிதித்துறைகளில் வருமானம் 11.2 சதவீதம் அதிகரித்து, 19,532 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்றும் இந்த நிறுவனத்தின் அதிக வருமானம் கொடுக்கும் ஒரு பிரிவாக இது உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்டர் புக்

ஆர்டர் புக்

இதே மொத்த வருவாய் விகிதமானது 15.5% அதிகரித்து, 51,572 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 44,636 கோடி ரூபாயாக இருந்தது.

அதேபோல இந்த நிறுவனத்தின் ஆர்டர் புக்கானது இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இது கடந்த 4வது காலாண்டில் மட்டும் 11.3 பில்லியன் டாலர் மதிப்பாகும். இதே கடந்த 2021 – 2022ல் மொத்தம் 34.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களையும் செய்துள்ளது.

செயல்பாட்டு மார்ஜின்
 

செயல்பாட்டு மார்ஜின்

செயல்பாட்டு மூலதனம் என்பது 25% ஆக அதிகரித்துள்ளது, இது முன்னதாக 19.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் டிசிஎஸ் நிறுவனம் இறுதி டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 22 ரூபாய் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராஜேஷ் கோபி நாதன், தொடர்ந்து ஆர்டர் புத்தகத்தில் ஆரோக்கியமான வளர்ச்சி, டிஜிட்டல் பரிமாற்றம் உள்ளிட்ட அடித்தளத்தினை வழங்கியுள்ளது.

அட்ரிஷன் விகிதம்

அட்ரிஷன் விகிதம்

இதே பணியாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தவரையில் 35,209 பேரை சேர்த்துள்ளது. இதே அட்ரிஷன் விகிதம் 17.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் நிறுவனம் தொடர்ந்து திறமைகளை தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கலாம்.

இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய நிலவரம் என்ன?

டிசிஎஸ்-ன் பங்கு விலையானது NSE-யில் இன்று 0.29% அதிகரித்து, 3696.40 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 3712.35 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலையானது, 3656.10 ரூபாயாக உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 4043 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 3004 ரூபாயாகும்.

BSE-யில் இப்பங்கின் விலையானது தற்போது, 0.26% அதிகரித்து, 3696.40 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 3711.25 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலையானது, 3656.85 ரூபாயாக உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 4045 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 3004.80 ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

q4 results updates! TCS net profit surges 7% to Rs.9926 crore, dividend declared

q4 results updates! TCS net profit surges 7% to Rs.9926 crore, dividend declared/தூள் கிளப்பிய டிசிஎஸ்.. Q4ல் ரூ.9926 கோடி லாபம்.. பங்குதாரர்களுக்கும் ஜாக்பாட்..!

Story first published: Monday, April 11, 2022, 20:21 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.