ஜார்க்கண்டின் தியோகரில் ரோப் காரில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி விமானப்படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் உதவியுடன் நடைபெற்று வருகிறது.
திரிகூடம் எனப்படும் இடத்தில் இரண்டு குன்றுகளுக்கு இடையே நேற்று நாற்பதுக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ரோப் கார்களில் சென்றுகொண்டிருந்தபோது தொழில்நுட்பக் கோளாறால் ரோப் கார்கள் ஆங்காங்கே நின்றன.
இதையடுத்துத் தேசியப் பேரிடர் மீட்புப் படை, விமானப்படை ஆகியவற்றின் உதவியுடன் 2 ஹெலிகாப்டர்கள் மூலம் சுற்றுலாப் பயணிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.