மகாராஷ்ட்ரா மாநிலத்தின் நாசிக்கில் ஒரே இடத்தில் இருபது மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பற்றி எரிந்தன.
ஜிதேந்திரா நிறுவனத்தின் மின் ஸ்கூட்டர்கள், தொழிற்சாலையில் இருந்து டெலிவரி செய்வதற்காக கண்டெயினர் லாரியில் கொண்டு செல்லப்பட்டன. அந்த கண்டெயினருக்குள் மேல்பாகத்தில் 20 வாகனங்கள், கீழ் பாகத்தில் அதே எண்ணிக்கையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், அந்த லாரி தொழிற்சாலையில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், அதன் மேல் பாகத்தில் இருந்த வாகனங்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்தன.
உடனடியாக அந்த லாரி நிறுத்தப்பட்டு தீ அணைக்கப்பட்டதால், மற்ற வாகனங்கள் சேதமின்றி தப்பியது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து ஆராய்வதாக ஜிதேந்திர நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.