தனுஷ்
மற்றும்
ஐஸ்வர்யா
கடந்த ஜனவரி மாதம் பிரிந்தனர். 18 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்த பின் இருவரும் பிரிவதாக அறிவித்தது ரசிகர்கள் உட்பட சினிமா வட்டாரங்களை சார்ந்தவர்களையும், அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களையும் அதிர்ச்சியடைய செய்தது.
அதைத்தொடர்ந்து அவர்களை மீண்டும் சேர்த்து வைக்க அவர்களுக்கு நெருக்கமானவர்கள் நிறைய முயற்சிகளை மேற்கொண்டனர். இருப்பினும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் முடிவை மாற்றிக்கொள்வதாக தெரியவில்லை.
தனுஷின் தரமான செய்கை..!அப்போ அவங்க பிளான் எல்லாம் அவ்ளோதானா?
இந்நிலையில் விவாகரத்திற்கு பிறகு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் வேலைகளில் அதிக கவனம் செலுத்த துவங்கினர். தனுஷ் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வர ஐஸ்வர்யா ஆல்பம் பாடலை இயக்கும் வேலையில் இறங்கினார்.
ஐஸ்வர்யா
சமீபத்தில் அவர் இயக்கிய ஆல்பம் பாடல் வெளியானது. அதற்கு கூட தனுஷ் ஐஸ்வர்யாவை வாழ்த்தினார். ஆனால் தனுஷ் ஐஸ்வர்யாவை தோழி என குறிப்பிட்டு வாழ்த்தியது சற்று சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஐஸ்வர்யா தற்போது பாலிவுட் படத்தை இயக்கும் வேலைகளில் இருக்கின்றார்.
மேலும் விவாகரத்திற்கு பிறகு சமூகத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றார் ஐஸ்வர்யா. தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள், புத்தகம் படிக்கும் புகைப்படங்கள், பிள்ளைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் என தினம் சமூகத்தளங்களில் புகைப்படம் வெளியிட்டு வருகின்றார்.
ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா இவ்வாறு சமூகத்தளங்களில் பிஸியாக இருப்பதற்கு பலவிதமான கருத்துக்கள் ரசிகர்களிடமிருந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா தனது தங்கை சௌந்தர்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூகத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உலக உடன்பிறந்தவர்கள் தினத்தை முன்னிட்டு ஐஸ்வர்யா தனது சகோதரி சௌந்தர்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு உலக உடன்பிறந்தவர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூகத்தளத்தில் செம வைரலாகிவருவது குறிப்பிடத்தக்கது.
விஜய் யை INSPIRE செய்த பூஜா… நெல்சன் கலாய்… கல… கல… INTERVIEW