முதல்வராக இருந்து பிரதமர் பதவிக்கு உயர்ந்த நமது பிரதமர் நரேந்திர மோடி போல, பாகிஸ்தானிலும் ஒரு முதல்வர், பிரதமர் பதவிக்கு வருகிறார். அவர்தான்
ஷபாஸ் ஷெரீப்
. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பிதான் இந்த ஷபாஸ் ஷெரீப்.
பாகிஸ்தானில் அரசியல் மோதல்கள் உச்சத்திற்கு வந்து தற்போது
இம்ரான் கான்
வெளியேற்றத்துடன் முடிவடைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இம்ரான் கான் அரசு கவிழ்ந்து விட்டது.
இந்த நிலையில் அடுத்து புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வேலையில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக உள்ளன. இதில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும்,
பாகிஸ்தான் முஸ்லீம் லீக்
நவாஸ் ஷெரீப் பிரிவின் தலைவராக செயல்படுபவருமான ஷபாஸ் ஷெரீப்தான் பிரதமராக தேர்வு செய்யப்படவுள்ளார். அவரை திங்கள்கிழமை பிரதமராக தேர்ந்தெடுக்கவுள்ளன எதிர்க்கட்சிகள்.
CSK: பேசாமல் இவரை கேப்டனாக்கியிருக்கலாம்.. என்ன இப்படி சொல்லிட்டாரு சாஸ்திரி!
புதிய பிரதமரைத் தேர்வு செய்வதற்காக
பாகிஸ்தான்
நாடாளுமன்றம் திங்கள்கிழமை கூட்டப்படுகிறது. 70 வயதான ஷபாஸ் ஷெரீப் பிரதமர் பதவிக்கான வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். அதேபோல இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹரிக் இன்சாப் கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ஷா மகமூத் குரேஷியும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மூலம் வீட்டுக்கு அனுப்பப்பட்ட முதல் பிரதமர் என்ற சாதனையை இம்ரான் கான் படைத்துள்ளார். மறுபக்கம் ஷபாஸ் ஷெரீப் புதிய சாதனையை செய்யவுள்ளார். முதல்வராக இருந்து பிரதமராக வரும் முதல்
பாகிஸ்தான் பிரதமர்
இவர்தான். பாகிஸ்தானின் பஞ்சாப் முதல்வராக நீண்ட காலம் செயல்பட்டவர் ஷபாஸ் ஷெரீப் என்பது நினைவிருக்கலாம். தற்போது பிரதமர் பதவிக்கு உயர்கிறார்.
இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு எதிராக 174 பேர் வாக்களித்தனர். இதே ஆதரவை எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமையும் பெற்றால் ஷபாஸ் ஷெரீப் பிரதமராக வெற்றி பெறுவார். பெரும்பான்மைக்கு தேவையான பலம் 172 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் நரேந்திர மோடிதான் பிரதமர் பதவிக்கு உயர்ந்த முதல் முதல்வர் என்பது நினைவிருக்கலாம். தற்போது பாகிஸ்தானிலும் அதேபோல ஒரு முதல்வர் பிரதமர் பதவிக்கு வருவது அந்த நாட்டில் பேசு பொருளாகியுள்ளது.