வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாக்., முஸ்லிம் லீக் கட்சி தலைவர் ஷெபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் இம்ரான் கான் அரசு தோல்வி அடைந்தது. இதனால் இம்ரான் கான் ஆட்சி அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இம்ரான் கான் மற்றும் பிடிஐ (பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்) கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய முடிவு செய்தனர். இதற்கிடையே, புதிய பிரதமருக்கான போட்டியில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் ஷெபாஸ் ஷெரீப் (இவர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஆவார்) வேட்புமனு தாக்கல் செய்தார்.
பாகிஸ்தானின்
புதிய பிரதமராக
தேர்வானார்
ஷெபாஸ் ஷெரீப்!
இம்ரான் கட்சி கூண்டோடு ராஜினாமா
………..
இவரை எதிர்த்து இம்ரான் கானின் பிடிஐ கட்சியின் 65 வயதான முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியை புதிய பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. ஆனாலும், இன்று நடைபெற்ற புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டெடுப்பை புறக்கணிப்பதாக குரேஷி உட்பட பிடிஐ கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதன் முடிவில், ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஷெபாஸ் ஷெரீப் பஞ்சாப் மாகாண முதல்வராக மூன்று முறை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement