வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-‘கர்நாடகாவின், ‘பிட் காயின்’ ஊழல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, அமெரிக்காவின் எப்.பி.ஐ., அதிகாரிகள் டில்லி வந்துள்ளதாக கூறப்படும் தகவல் அடிப்படை ஆதரமற்றது’ என, சி.பி.ஐ., மறுத்துள்ளது.
கர்நாடகாவில், ‘பிட் காயின்’ எனப்படும், ‘டிஜிட்டல் கரன்சி’ வாயிலாக, பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகவும், இதில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு தொடர்பு உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியினர் கடந்த ஆண்டு குற்றஞ்சாட்டினர். இந்த பிட் காயின் ஊழல் விவகாரத்தை, கர்நாடகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் எப்.பி.ஐ., அதிகாரிகள், இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த டில்லி வந்துள்ளதாக, காங்., செய்தி தொடர்பாளர்ரன்தீப் சுர்ஜேவாலா, கர்நாடகா காங்., – எம்.எல்.ஏ., பிரியங்கா கர்க் உள்ளிட்டோர் தெரிவித்தனர். இதை, சி.பி.ஐ., தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது குறித்து, சி.பி.ஐ., செய்தி தொடர்பாளர் ஆர்.சி.ஜோஷி வெளியிட்டுள்ள அறிக்கை:பிட் காயின் விவகாரம் குறித்து விசாரிக்க, அமெரிக்காவின் எப்.பி.ஐ., அதிகாரிகள் டில்லி வரவில்லை. அவர்களை விசாரணைக்கு அனுப்புமாறு, சி.பி.ஐ., தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்படவில்லை.இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை; அதில் உண்மையில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.(பெங்களூரு வராத பக்கம்)
Advertisement