வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு-:பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இலங்கை மக்கள் அமைதி காக்க வேண்டும் என பிரதமர் மகிந்தா ராஜபக்சே கூறினார்.
நம் அண்டை நாடான இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து அந்நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. பெட்ரோலிய பொருட்கள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடு முழுதும் தொடர் மின்வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர அமைச்சர்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் இலங்கை அரசியலில் குழப்பமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், இலங்கையின் கொழும்பு நகரில், பார்லிமென்ட் அருகே அமைந்துள்ள கல்லே பேஸ் பசுமை பூங்காவில் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட துவங்கினர்.நேரம் ஆக ஆக, மக்கள் கூட்டம் அதிகரிக்க துவங்கியது.
ராஜபக்சே குடும்பத்தினரை பதவி விலக கோரி மக்கள் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்நிலையில் இன்று பிரதமர் மகிந்தா ராஜபக்சே கூறியது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை அரசு 24 மணி நேரமும் பாடுபட்டு வருகிறது. அதுவரை இலங்கை மக்கள் அமைதி காக்க வேண்டும். நீங்கள் போராடும் ஒவ்வொரு நிமிடமும் நாட்டிற்கு வருவாய் இழப்பு ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement