பிரான்ஸ்:
பிரான்ஸ் அதிபர் தேர்தல், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் இமானுவேல் மேக்ரான் முன்னிலை பெற்றுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் 12-வது அதிபர் தேர்தலுக்கான முதல் சுற்று வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதன் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போதைய அதிபர் இமானுவேல் மேக்ரன் 27.42 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி உள்ளார். ஆனால் அந்நாட்டு தேர்தல் முறைப்படி, முதல் சுற்றில் பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகள் அதாவது 50 சதவீதம் வாக்குகள், யாரும் பெறவில்லை என்றால் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும்.
முதல்கட்ட தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற 2 வேட்பாளர்கள் மட்டுமே 2-ம் கட்ட வாக்குப்பதிவில் போட்டியிடுவர். அதன்படி, இம்மானுவேல் மேக்ரோனை தொடர்ந்து தீவிர வலது சாரி ஆதரவாளரான மரின் லூ பென் 24.16 சதவீதம் வாக்குகள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளார். இதனால், வரும் 24-ம் தேதி நடைபெற உள்ள இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் இம்மானுவேல் மேக்ரன் மற்றும் மரின் லூபென் மட்டுமே மோத உள்ளனர். பிரான்ஸ் அதிபர் பதவிக்கு மொத்தம் 12 பேர் போட்டியிட்ட நிலையில், ஜீன் லுக் மெலன்கான் 3-வது இடத்தை பிடித்தார். கருத்துக்கணிப்பு படி, குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில், இம்மானுவேல் மேக்ரன் மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.