பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் முதல்கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வரும் இமானுவேல் மேக்ரோனின் பதவி காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.முதல் கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு வரும், 24ல் நடக்கிறது. மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில், தற்போதைய அதிபரும், குடியரசு கட்சி வேட்பாளருமான இமானுவேல் மேக்ரானுக்கும், வலதுசாரி வேட்பாளரான மரைன் லீ பென்னுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
காலை 8:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு இரவு 8:00 மணி வரை நடந்தது. நேற்று மதிய நிலவரப்படி 25.5 சதவீத ஓட்டுகள் பதிவானது. இது 2017ல் பதிவான ஓட்டுகளை விட குறைவு.’ஓட்டுப்பதிவு சதவீதம் குறையும்பட்சத்தில், அது இமானுவேல் மேக்ரானுக்கு பாதகமாக அமையும்’ என, நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் முதல்கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது.ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வரும் இமானுவேல் மேக்ரோனின்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.