பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு போட்டியில் இம்மானுவேல் மக்ரோனை எதிர்த்து மரைன் லு பென் போட்டியிடவுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவு முடிவடைந்து, வாக்கு எண்ணிக்கை முடிவுகளும் வெளியாகியுள்ள நிலையில், ஏப்ரல் 24ம் திகதி நடைபெற உள்ள இரண்டாம் சுற்று தேர்தல் வாக்குப்பதிவில் தற்போதைய ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தீவிர வலதுசாரி கொள்கையாளரான மரைன் லு பென்னை எதிர்கொள்ள இருக்கிறார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான முதல் சுற்று போட்டியில் ஐந்திற்கும் மேற்பட்ட கட்சித்தலைவர்கள் போட்டியிட்ட நிலையில், இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 88 சதவிகித வாக்கு எண்ணிக்கையில் இம்மானுவேல் மக்ரோன் 27.42 சதவிகித வாக்குகளையும், மரைன் லு பென் 24.92 சதவிகித வாக்குகளையும் பெற்று முதல் இரண்டு இடங்களை கைப்பற்றியுள்ளனர்.
#UPDATE Partial 1st round election results as of 2220 GMT@AFPgraphics #presidentielles2022 pic.twitter.com/koOOC3c0GE
— AFP News Agency (@AFP) April 10, 2022
முதல் சுற்று வாக்கெடுப்பில் முதல் இரண்டு இடங்களை மக்ரோன் மற்றும் லு பென் பெற்ற நிலையில் இரண்டாம் சுற்றில் இருவரும் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.
இதில் 50 சதவிகித வாக்குகளை பெரும் போட்டியாளரே வெற்றி பெற்றவர்களாக கருதப்படும் விதிமுறைகள் இருக்கும் நிலையில், முதல் சுற்று வாக்குப்பதிவில் மக்ரோன் 28 சதவிகித வாக்குகளை பெற்று தற்போதைக்கு முன்னிலையில் உள்ளார்.
credit:BBC
இதைத்தொடர்ந்து வெளியான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் மிக நெருக்கமான புள்ளிகளை காட்டுவதால், தேர்தல் பிரச்சாரம் கூடுதல் விறுவிறுப்பு அடைந்துள்ளது.