பிரான்ஸ் பாராளுமன்ற அதிபர் தேர்தல் – விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு

பாரீஸ்:
பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வருபவர் இமானுவல் மேக்ரான். இவர் கடந்த 2017 முதல் அதிபராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது.
இதற்கிடையே, அதிபர் தேர்தலில் இரண்டாவத் முறையாக போட்டியிட உள்ளேன் என அதிபர் மேக்ரான் தெரிவித்திருந்தார்.
புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. பிரான்சின் அரசியலமைப்பு சட்டப்படி 2 சுற்று தேர்தல் மூலம் அதிபர் தேர்வு செய்யப்படுகிறார்.
இந்த தேர்தலில் தொடர்ந்து 2-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடும் மேக்ரான் உள்பட மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் பிரான்சில் முதல் சுற்று அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. 4.90 கோடி வாக்காளர்களுக்காக பல்லாயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர். வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இமானுவல் மேக்ரானுக்கும், வலதுசாரி வேட்பாளரும், பெண் வக்கீலுமான மரைன் லு பென்னுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
முதல் சுற்று தேர்தலில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை என்றால், வரும் 24-ம் தேதி முதல் சுற்றில் அதிக வாக்குகளைப் பெற்ற 2 வேட்பாளர்களுக்கு இடையே இரண்டாவது சுற்று தேர்தல் நடத்தப்படும். அதில் வெற்றிப்பெறுபவர் அதிபராக தேர்வு செய்யப்படுவார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.