பாட்னா:
பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டம் ஆமியாவார் கிராமத்தில் 50 ஆண்டு பழமையான 60 அடி நீள இரும்பு பாலம் உள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பாலத்தை சிலர் ஜே.சி.பி எந்திரம், கியாஸ் கட்டர் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி வெட்டி எடுத்து அலேக்காக கொண்டு சென்று விட்டனர். திடீரென பாலம் காணாமல் போனதை கண்ட கிராமமக்கள் இது பற்றி போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அதிகாரிகள் என சொல்லி ஒரு கும்பல் இந்த நூதன கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்தகும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருட்டில் ஈடுபட்ட 8 பேர் பிடிபட்டனர். போலீசார் அவர்களை கைது செய்தனர். இதில் நீர்பாசனத்துறை அதிகாரி அரவிந்தகுமார், துணை வட்ட அதிகாரி ராதேஷியாம்சிங் ஆகிய 2 அதிகாரிகளும் அடங்கும். இவர்கள் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்தகொள்ளையை அரங்கேற்றி உள்ளனர். போலீசார் அவர்களிடம் இருந்து ஜே.சி.பி எந்திரம், கார், கியாஸ் கட்டர்கள், திருட்டு போன இரும்பு தளவாடங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையும் படியுங்கள்… மெரினா கடற்கரையில் நம்ம சென்னை ‘செல்பி’ பகுதியை சேதப்படுத்திய வாலிபர்கள்