பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால், இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது. இம்ரான்கானின் பிரதமர் பதவி பறிபோனதையடுத்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணி புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க இன்று கூடின.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் இன்று மதியம் தொடங்கிய நிலையில், இன்னும் சிறிது நேரத்தில் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய வாக்குப்பதிவு நடைபெறும். இந்நிலையில், 174 வாக்குகள் பெற்றும் பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியின் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
இன்று இரவு ஷாபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் 23வது பிரதமராக அவருக்கு அதிபர் ஆரிப் ஆல்வி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
மேலும் படிக்க | ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி; மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்: இம்ரான் கான்
மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்ற நவாஸ் ஷெரீப், நாடு திரும்பாமல் லண்டனிலேயே தஞ்சம் அடைந்துள்ள நிலையில், அடுத்த மாதம் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்ப உள்ளதாக அவரது கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பிடிஐ எம்பிக்கள் ராஜினாமா செய்து விட்டு வெளிநடப்பு செய்தனர். புதிய பிரதமரை தேர்வு செய்ய வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், ஷா மெஹ்மூத் குரேஷி பதவி விலகுவதாக அறிவித்தார்.
பின்னர் பிடிஐ எம்பிக்கள் வாக்களிப்பதற்கு முன்பே ராஜினாமா செய்தனர். புதிய பிரதமரை தேர்வு செய்யும் பணியை புறக்கணிக்க இம்ரான் கானின் கட்சியான பிடிஐ முடிவு செய்ததை அடுத்து பிடிஐ எம்பிக்கள் ராஜினாமா செய்தனர்.
ஈகை திருநாளுக்கு பிறகு நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்பலாம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | 26/11 சூத்திரதாரி ஹபீஸ் சயீத்துக்கு 31 ஆண்டு சிறை: பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு