சென்னை: சட்டப்பேரவையில் இன்று பள்ளிக்கல்வித் துறை மற்றும் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து துறை அமைச்சர்கள் பதில் உரை நிகழ்த்துகின்றனர்.
சட்டப்பேரவையில் துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ம் தேதிதொடங்கியது.
முதல் நாள் நீர்வளத் துறை, மறுநாள் 7-ம் தேதிநகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கைகள், 8-ம் தேதி கூட்டுறவு, உணவுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது.
2 நாட்கள் (சனி, ஞாயிறு) விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிக் கல்வி, உயர்கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
விவாதத்தை தொடர்ந்து, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பதில் உரை நிகழ்த்தி, துறைகள் தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.