குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களுக்கு கையேடு தயாரித்து வழங்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல அரசு பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்க ஜெர்மன், ஜப்பான், பிரெஞ்ச், சீன மொழிகள் கற்றுக் கொடுக்கும் திட்டம் அறிமுகம், மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பார்வையிட நடவடிக்கை உட்பட பல்வேறு அறிவிப்புகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.