சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்துள்ள மத்தியஅரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்.
மத்தியஅரசு நடப்பு கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிக்கு சேர நுழைவுத் தேர்வு அமல்படுத்தி உள்ளது. மேலும் மாநில பல்கலைக்கழகங்களும் நுழைவு தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்ட படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து தனித் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதலமைச்ச்ர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்
இதுகுறித்து பேசிய முதல்வர், மாநில அரசின் உரிமையை நிலைநாட்ட மத்திய பல்கலை. நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் முன்மொழிய செய்யப்பட்டு உள்ளதாகவும், நுழைவுத் தேர்வு, பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு சம வாய்ப்பை வழங்காது. பயிற்சி மையங்கள் புற்றீசல் போல வளர மட்டுமே நுழைவுத் தேர்வு சாதகமாக அமையும், மாநிலத்தின் கல்வி உரிமை மீது ஒன்றிய அரசின் தாக்குதல் தொடர்கிறது என்றும்- முதலமைச்சர் குறிப்பிட்டார்.