போலந்து முன்னாள் ஜனாதிபதி உட்பட 96 பேர் கொல்லப்பட்ட விமான விபத்திற்கு முதன்மை காரணம் ரஷ்யா என்பது, விரிவான விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கடந்த 2010ல் நடந்த விமான விபத்து தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுத்துள்ள போலந்து நிர்வாகம், பல முக்கிய குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளது.
மேலும், விமானத்தினுள் வெடிப்பொருட்களை மறைத்து வைத்து, திட்டமிட்டே வெடிக்க வைத்துள்ளதும் விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது.
தொடர்புடைய விமான விபத்தில் போலந்தின் முன்னாள் ஜனாதிபதி Lech Kaczynski, அவரது மனைவி மற்றும் 94 அரசியல் தலைவர்கள், இராணுவ வீரர்கள் மற்றும் போலந்தின் முக்கியஸ்தர்கள் பலர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் ரஷ்யாவின் சட்டவிரோத செயற்பாடுகளால் கொல்லப்பட்டுள்ளனர் என விசாரணைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மட்டுமின்றி, குறித்த விமான விபத்தானது, விமானிகள் அல்லது விமான ஊழியர்களின் தவறான நடவடிக்கைகளால் ஏற்பட்டதல்ல எனவும்,
மாறாக விமானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் வெடித்ததாலையே அந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
விமான விபத்து நடந்து 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அஞ்சலி கூட்டமானது ஏப்ரல் 10ம் திகதி முன்னெடுக்கப்பட்டது.
திரளான மக்கள் கலந்து கொண்டு, புஷ்பாஞ்சலி முன்னெடுத்துள்ளனர்.
இந்த நினைவஞ்சலி கூட்டத்தில் போலந்தின் தற்போதைய ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
போலந்தின் அண்டை நாடான உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை முன்னெடுத்துவரும் நிலையில்,
தற்போது போலந்துக்கும் ரஷ்யாவுக்கும் மோதல் போக்கு உருவாகியுள்ள வேளையில் இந்த விமான விபத்து தொடர்பில் விரிவான அறிக்கை வெளியாகியுள்ளது.
மேலும், ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை போலந்து முன்னெடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.