கோழிப்பண்ணைகளில் கம்பி கூண்டுகளை ஒழிக்க வலியுறுத்தி பீட்டா சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றுள்ளது. கூண்டுக்குள் சிறகை விரிக்க முடியாதபடி அடைக்கப்படும் கோழிகள், துன்புறுத்தப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகள் ஏந்தியிருந்தனர்.
விலங்குகள் நல அமைப்பினர் இணைந்து நடத்திய இந்தப் போராட்டமானது டெல்லியின் LOC ஜந்தர்மந்தரில் நடந்தது. பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் இணைந்து டெல்லி ஜந்தர்மந்தரில் நடத்திய இந்தப் போராட்டத்தில், “பேட்டரி கேஜ்” என்று அழைக்கப்படும் கம்பி வலை கூண்டுகளுக்குள் கோழிகளை அடைத்து வைத்து வதைக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.
போராட்டக்காரர்கள் தரப்பில் `அந்தக் கூண்டுக்குள் ஒரு கோழியால் தன் சிறகைக்கூட விரிக்க முடியாது. இரண்டடி கூட நடமாட முடியாது என்ற நிலையே இருக்கும். இப்படி கூண்டுக்குள் அடைத்து முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்’ என்று கூறப்பட்டது. இதில் கோழி வேடமிட்ட ஒருவரை கூண்டில் அடைத்து, பதாகைகளுடன் போராட்டக்காரர்கள் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் சுமார் 40 கோடி கோழிகள் கம்பிவலை கூண்டுக்குள் அடைத்து முட்டை உற்பத்திக்காக துன்புறுத்தப்படுவதாகவும், உலகின் பல நாடுகளில் இதுபோன்ற கூண்டுகளை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் போராட்டக்கார்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய செய்தி: `நமது நல்லுறவு உலகின் பல பிரச்னைகளுக்கு தீர்வு காணும்’ – அதிபர் பைடனிடம் பிரதமர் மோடி உறுதிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM