இந்திய பங்கு சந்தைகள் நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சரிவிலேயே காணப்படுகின்றது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தினையே கொடுத்துள்ளது.
இந்த வாரத்தில் பல்வேறு நிறுவனங்களின் காலாண்டு அறிக்கை வெளியாகவிருக்கும் நிலையில், அது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
சர்வதேச சந்தையில் அமெரிக்க சந்தையானது கடந்த அமர்வில் சரிவில் முடிவடைந்ததையடுத்து, இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் சரிவிலேயே காணப்பட்டன. இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் காணப்படுகின்றது.
அன்னிய முதலீடுகள்
கடந்த ஏப்ரல் 8 நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கள் 575.04 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 16.51 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என என்எஸ்இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. கடந்த வாரத்தில் சில தினங்களாகவே தொடர்ந்து இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் அதிகரித்து வந்த நிலையில், சில தினங்களாக வெளியேறி வருகின்றன. இது புராபிட் புக்கிங் காரணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்கம் எப்படி?
இன்று காலம் ப்ரீ ஓபனிங்கிலேயே சென்செக்ஸ் 2.29 புள்ளிகள் குறைந்து, 59,444.89 புள்ளிகளாகவும், நிஃப்டி 30.60 புள்ளிகள் அதிகரித்து, 17,704.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 202.91 புள்ளிகள் குறைந்து, 59,244.17 புள்ளிகளாகவும், நிஃப்டி 46.10 புள்ளிகள் குறைந்து, 17,738.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1730 பங்குகள் ஏற்றத்திலும், 584 பங்குகள் சரிவிலும், 141 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
கவனிக்க வேண்டிய பங்குகள்
இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் பட்டியலில் டிசிஎஸ், டாடா பவர், இன்சூரன்ஸ் துறை சார்ந்த பங்குகள், வோடபோன், டாடா ஸ்டீல், ஆக்ஸிஸ் வங்கி, ஐடிபிஐ வங்கி, டெல்டா கார்ப், பிர்லா டயர்ஸ், எல்நெட் டெக்னாலஜி,கேசோரம் இண்டஸ்ட்ரீஸ், லாசா சூப்பர் ஜெனரிக்ஸ் உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டிய லிஸ்டில் உள்ளன.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சற்று சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ டெக், நிஃப்டி ஐடி உள்ளிட்ட குறியீடுகள் 1$% மேலாகவும், இதே நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி உள்ளிட்ட குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. மற்ற அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் .காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், அப்பல்லோ ஹாஸ்பிட்டல், யுபிஎல், எஸ்பிஐ, என்.டி.பி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இன்ஃபோசிஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஹெச்.சிஎ.எல் டெக், ஹெச்.யு.எல், விப்ரோ உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எஸ்பிஐ, இந்தஸ்இந்த் வங்கி, என்.டி.பி.சி, ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக், விப்ரோ, ஹெச்.யு.எல், நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம் என்ன?
பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சற்றே சரிவில் தொடங்கிய சந்தையானது, தற்போது 9.56 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 411.91 புள்ளிகள் குறைந்து, 59,035.27 புள்ளிகளாகவும், நிஃப்டி 102.1 புள்ளிகள் குறைந்து, 17,682.25 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
opening bell: indices open lower amid weak global cues, Focus in TCS, Tata motors
opening bell: indices open lower amid weak global cues, Focus in TCS, Tata motors/முதல் நாளே ஏமாற்றம் தான்.. சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ்!