முஸ்லிம்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக பார்க்க கூடாது: பிரகலாத் ஜோஷி

பெங்களூரு:

தார்வாரில் முஸ்லிம் வியாபாரி ஒருவரை சிலர் தாக்கி அவர் விற்பனை செய்ய வைத்திருந்த தர்ப்பூசணி பழங்களை அழித்தனர். இந்த நிலையில் மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி தார்வாரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அமைதி-மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்கள் மற்றும் அவர்கள் நடவடிக்கை எடுப்பது என்பது வேறு விஷயம். இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம். மத அடிப்படைவாதிகள் பிரச்சினையை தூண்டிவிடுகிறார்கள். இதை ஜனநாயக ரீதியில் செயல்படும் அமைப்புகள் மற்றும் அரசு எதிர்க்க வேண்டும்.

அனைவரும் மத நல்லிணக்கத்தை காக்க வேண்டும். முஸ்லிம்கள் அனைவரையும் ஒரே மாதிரி பார்க்கக்கூடாது. அவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்ற முடிவுக்கு வருவது தவறானது. யாரும் அத்தகைய மனநிலையை வளர்த்து கொள்ள கூடாது. சட்டத்தை கையில் எடுக்காமல் அனைவரும் பொறுமை காக்க வேண்டும். கர்நாடக மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி பா.ஜனதாவில் சேருவது பற்றி எனக்கு தெரியாது. இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா மற்றும் தேசிய தலைவர்கள் முடிவு செய்வார்கள்.

இவ்வாறு பிரகலாத்ஜோஷி கூறினார்.

இதையும் படிக்கலாம்…
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி மூலம் இன்று பேச்சுவார்த்தை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.