
ரஜினி 169வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?
அண்ணாத்த படத்தையடுத்து நெல்சன் இயக்கும் தனது 169வது படத்தில் நடிக்கப் போகிறார் ரஜினிகாந்த். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் அவருடன் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் என பலர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் ஜூன் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைத்திருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார் நெல்சன் திலீப்குமார்.