உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை முன்னெடுத்த அந்த நாள், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தமது மனைவியிடம் கூறிய இரண்டு வார்த்தையை அவர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பானது 40 நாட்கள் கடந்தும் நீடித்து வருகிறது.
கடந்த பிப்ரவரி 24ம் திகதி, உள்ளூர் நேரப்படி அதிகாலையில் ரஷ்ய துருப்புகள் உக்ரைன் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான வீரர்கள் உக்ரைனுக்குள் ஊடுருவினர்.
சம்பவத்தன்று, திடீரென்று வெடிகுண்டு சத்தம் கேட்கவே, திடுக்கிட்டு கண்விழித்ததாக கூறியுள்ளார் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் மனைவி Olena Zelenska.
மட்டுமின்றி, அது வெடிகுண்டு சத்தம் என புரிந்து கொள்ள தமக்கு தாமதமானதாகவும், அந்த வேளை படுக்கையில் கணவரையும் காணவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர், தமது கணவர் படுக்கையில் இருந்து எழுந்து, உடைமாற்றி வந்தவர், வெறும் இரண்டே வார்த்தையில் தமக்கு பதிலளித்ததாகவும்,
தொடங்கி விட்டது என்பது மட்டுமே அவர் அப்போது தம்மிடம் கூறிய வார்த்தைகள் என Olena Zelenska குறிப்பிட்டுள்ளார்.
அன்று தான் ஜெலென்ஸ்கி வெள்ளை சட்டை அணிவதை தாம் கடைசியாக பார்த்ததாகவும், அதன் பின்னர் தற்போது வரையில் அவர் இராணுவ உடையிலேயே காணப்படுகிறார் எனவும் Olena Zelenska தெரிவித்துள்ளார்.
வீட்டைவிட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டால், தேவையான ஆவணங்களையும் அத்தியாவசியப் பொருட்களையும் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளதாக Olena Zelenska குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய படையெடுப்பு தொடர்பில் அமெரிக்கா உட்பட பல்வேறு மேற்கத்திய நாடுகள் தகவல் வெளியிட்டு வந்தாலும், அவ்வாறான சூழல் உருவாகும் என நம்பவே முடியவில்லை என Olena Zelenska தெரிவித்துள்ளார்.
உக்ரேனிய மக்களில் ஒருவருக்கு ரஷ்ய துருப்புகளால் ஒரு தீங்கு ஏற்பட்டால், அது மொத்த உக்ரேனிய மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பாகவே கருதப்படும் எனவும் Olena Zelenska தெரிவித்துள்ளார்.