புதுடெல்லி,
குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் ராம நவமி ஊர்வலங்களின் போது நிகழ்ந்த வன்முறை மற்றும் டெல்லியில்
ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது மாணவர்கள் விடுதியில் அசைவ உணவு பரிமாறப்பட்டதாக கூறி நிகழ்த்தப்பட்ட மோதல்கள் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
வெறுப்பும் வன்முறையும் நாட்டை பலவீனப்படுத்துவதாக தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.
சகோதரத்துவம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் செங்கற்களால் முன்னேற்றத்திற்கான பாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவைப் பாதுகாக்க அனைத்து குடிமக்களும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்று ராகுல் தெரிவித்துள்ளார்
பாஜக ஆட்சியில் பண்டிகை கொண்டாட்டங்கள், வெறுப்பு மற்றும் வன்முறை நிகழ்வுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டி உள்ளார்.
ஒரு காலத்தில், இந்தியாவில் பண்டிகைகளின் போது, மக்கள் அமைதி செழிப்பையும், வளத்தையும் விரும்புவார்கள் என்றும், இப்போது பண்டிகைகள் வெறுப்பு மற்றும் வன்முறை நிகழ்வுகளாக மாறியுள்ளன என்றும் தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்…குஜராத், மத்திய பிரதேசம் உள்பட 4 மாநிலங்களில் ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை- இரண்டுபேர் பலி