விடுதியில் அசைவ உணவு நிறுத்தம்: டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே கடுமையான மோதல்!



டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதி கேண்டீனில் இறைச்சி பரிமாறப்பட்டது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இரண்டு மாணவ குழுக்களுக்கு இடையே பலத்த மோதல் ஏற்பட்டுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள காவேரி விடுதியில் மதியம் 3:30 மணியளவில் ராம நவமி அன்று இறைச்சி பரிமாறப்பட்டதற்கு எதிராக எழுந்த தகராறில் இரண்டு மாணவர்கள் குழுக்கள் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கியதில் 6 மாணவர்கள் வரை காயமடைந்துள்ளனர்.

பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) உறுப்பினர்கள் தான், இன்று ராம நவமி என்பதாக கூறி மெஸ் செயலாளரைத் தாக்கி, விடுதியில் இறைச்சி உணவுகளை வழங்க விடாமல் ஊழியர்களைத் தடுத்ததாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் (JNUSU) குற்றம் சாட்டியுள்ளது.

இந்த கருத்தை எதிர்த்துள்ள ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் மாணவர் பிரிவான ஏபிவிபி ராம நவமியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பூஜை நடைமுறைகளை இடதுசாரி அமைப்பு உறுப்பினர்கள் தான்  தடுத்தாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இறுதியில் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தில் இரண்டு தரப்பினர்களும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டதில் சிலரின் மண்டை உடைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

[


]

இதையடுத்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிசார் வரவழைக்கபட்டு மாணவர்களுக்கு இடையிலான மோதலை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மேலும் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு பல்கலைக்கழக விடுதியில் அசைவம் வழங்குவதை மெஸ் ஊழியர்கள் நிறுத்தியுள்ளனர்.      



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.