உக்ரைனின் தெற்கு பகுதி நகரான மைகோலைவ் மிகப்பெரிய தாக்குதல் வெடிப்பு நிகழ்ந்து இருக்கும் நிலையில் அதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி அச்சத்தில் அனைவரையும் உறைய வைத்துள்ளது.
நான்கு கட்ட அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிந்துள்ள போதிலும் உக்ரைனில் ரஷ்யா தனது போர் தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து 6வது வாரமாக தாக்குதல் நடத்திவருகிறது.
உக்ரைனின் மேற்கு பகுதி நகரங்களான தலைநகர் கீவ், மரியுபோல் மற்றும் கார்க்கிவ் ஆகிய பகுதிகளில் இருந்து பெரும்பாலான ரஷ்ய படைகள் பின்னெடுக்கப்பட்டு உக்ரைனின் கிழக்கு எல்லைப் பகுதியான டான்பாஸில் தற்போது கவனம் செலுத்திவருகிறது.
UKRAINE: Large explosion reported near the city of Mykolaiv in southern Ukraine. – @clashreport pic.twitter.com/R7mtwgLfKN
— Conflict News (@Conflicts) April 10, 2022
இந்தநிலையில், உக்ரைன் தெற்கு பகுதி நகரான மைகோலைவ்வில் மிகப்பெரிய தாக்குதல் வெடிப்பு நடத்தப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இந்த வெடிப்பு தாக்குதலை மைகோலைவ் நகர பிராந்திய நிர்வாகத்தின் தலைவர் விட்டலி கிம் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் இந்த வெடிப்பு விபத்து குறித்தும் இதில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
ரஷ்யா எதிராக சாட்சியாக மாறும்…இரத்தில் நனைந்த பொம்மை: சிக்கியது ஆதாரம்!
இதுகுறித்த இணையத்தில் பரவிவரும் காணொளி காட்சியில் வெடிப்பு தாக்குதல் நிகழ்ந்துள்ள போது வானில் ஏற்பட்ட ஒளிப்பிரகாசம் பார்ப்பவர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.