அணிசேரா இயக்கத்தில் உள்ள நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 ஏப்ரல் 07 ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.
இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் அரசாங்கத்தின் பதில்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தூதுவர்களிடம் விளக்கினார். இதில் அரசியல் மற்றும் பொருளாதார அம்சங்கள் குறித்த கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்திலான சீர்திருத்தம், அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்கான தயார் நிலை ஆகியன குறித்தும் இதன்போது மேலும் கலந்துரையாடப்பட்டது.
தூதுவர்கள் சார்பாக உரையாற்றிய எகிப்தின் தூதுவர் மஜித் மோஸ்லே, நேர்மையாக கலந்துரையாடுவதற்கான வாய்ப்பைப் பாராட்டினார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 ஏப்ரல் 10