சென்னை:
2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் (மார்ச்) 18-ந்தேதி தொடங்கி 24ந்தேதி முடிவடைந்தது. 6 நாட்கள் மட்டுமே நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, 18, 19 தேதிகள் நிதி மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 21ந்தேதி முதல் 24-ந்தேதி வரை விவாதம் நடந்தது. அமைச்சர்கள் பதிலுரைக்கு பிறகு சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்காக ஏப்ரல் 6ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். அதன்படி கடந்த ஆறாம் தேதி சட்டப்பேரவை மீண்டும் கூடியது.
இந்நிலையில், சனி, ஞாயிறு 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. இதில் உயர் கல்வி, பள்ளி கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.