தமிழ்நாடு அரசு 2022-23-ம் ஆண்டில் ரூ 90,116 கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விவரங்களின்படி தமிழக அரசு 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.23,500 கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஏப்ரல்-ஜூன் 2022 காலாண்டில் மாநில வளர்ச்சிக் கடன்கள் என்று அழைக்கப்படும் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 375 கோடி கடன் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021-22 முதல் காலாண்டுடன் ஒப்பிட்டால், தமிழக அரசு ரூ. 23 ஆயிரத்து 450 கோடி கடனாகப் பெறுவதாகக் குறிப்பிட்டது. ஆனால், உண்மையில், அப்போது தமிழக அரசால் திரட்டப்பட்ட தொகை ரூ.24 ஆயிரம் கோடியாக இருந்தது.
ஐ.சி.ஆர்.ஏ நிறுவனத்தின் மதிப்பீடுபடி, 2023 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மகாராஷ்டிரா மாநிலம் ரூ.32 ஆயிரம் கோடி கடன் வாங்கும் என்று தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா ரூ. 32,000 கோடி, உத்தரப் பிரதேசம் ரூ.27,000 கோடி, தமிழ்நாடு ரூ. 23,500 கோடி, அடுத்து ஆந்திரப் பிரதேசம் 17,000 கோடி என இந்த மாநிலங்களால் மொத்தக் கடன் தொகையில், கிட்டத்தட்ட பாதி தொகை கடனாக வாங்கப்பட்டுள்ளன. இதில், குறிப்பிடும்படியாக, 2022 நிதியாண்டில், தமிழக அரசு ரூ. 87 கோடி கடன் வாங்கியுள்ளது.
2022-23-ம் ஆண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டின்படி, ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறைக்காக மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் ரூ. 6,500 கோடியைத் தவிர்த்து, நிகரத் தொகை ரூ. 90 ஆயிரத்து 116.52 கோடியை தமிழக அரசு பெற திட்டமிட்டுள்ளது.
தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தனது பட்ஜெட் உரையில், ஜிஎஸ்டி இழப்பீடு தவிர்த்து, நிதிப் பற்றாக்குறை ரூ90,114 கோடியாக அதாவது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.63% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.
மேலும், நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில், நிதி பற்றாக்குறை 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ. 55,272.79 கோடியிலிருந்து 2022-23ல் ரூ. 52,781.17 கோடியாகக் குறையும் என்று அவர் கூறினார்.
2022-23 பட்ஜெட் மதிப்பீட்டின்படி, மத்திய வரிகளில் தமிழ்நாட்டின் பங்காக ரூ. 33,311 கோடியைப் பெற வாய்ப்புள்ளது. இது 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளை விட 1% குறைவு. இந்திய மதிப்பீடுகள், மத்திய வரிகளில் தமிழக அரசின் எதிர்பார்ப்புகள் பழமைவாதம் என்று கூறியது. மாநிலங்களுக்கு வரிப் பகிர்வுக்காக மத்திய அரசு 2023 நிதி ஆண்டில் 9.6% பட்ஜெட் வளர்ச்சியைக் கணித்துள்ளது. இதன் விளைவாக, பட்ஜெட் தொகையான ரூ. 2,31,407.28 கோடியைவிட 2023 நிதியாண்டில் மாநிலத்தின் வருவாய் வரவுகள் அதிகமாக இருக்கும் என்று தமிழக அரசு எதிர்பார்க்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“