கோயில்களில் சேவைகளுக்கான இணையவழி முன்பதிவு முறையை அரசு இ-சேவை மையங்களிலும் இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 550 கோயில்களில் இணையவழியில் 255 கட்டண சேவைகளை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் இந்த திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அர்ச்சனை, அபிஷேகம், திருமணம், பரிகாரம், சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி கட்டணம் உள்ளிட்ட 255 வகையான கட்டண சேவைகள் இணையவழி மூலம் முன்பதிவாகவும், கோயில் கட்டண சீட்டு மையங்களில் கணினி வாயிலாகவும் ரசீது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. www.hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலம் இந்த சேவை வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, முதல்கட்டமாக 550 கோயில்களில் கட்டண சேவைகளுக்கான இணைய வழி முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் அதிகம் வரும் பிற கோயில்களிலும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: ‘மாநில, மொழி உரிமையைக் காக்க பாடுபடுவோம்’ – முதல்வர் ஸ்டாலின் மடல்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM