பெங்களூரு : ”போன் செய்தால் 72 மணி நேரத்தில் முதியோர் ‘பென்ஷன்’ உட்பட பிற நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டம் நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது,” என வருவாய் துறை அமைச்சர் அசோக் கூறினார்.கர்நாடகாவில், ‘வீட்டு வாசலுக்கே பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில், கிராம கணக்காளர் மற்றும் வருவாய் கண்காணிப்பாளர் அளவில் சில புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து, போன் செய்தால் ’72 மணி நேரத்தில் பென்ஷன்’ எனும் திட்டம் வருவாய் துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.வருவாய் துறை அமைச்சர் அசோக் கூறியதாவது:சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கர்நாடகாவில் விதவை, முதியோர், மாற்றுத்திறனாளி என 68 லட்சம் பேர் மாத உதவித்தொகையான பென்ஷன் பெறுகின்றனர்.சமீபத்தில், ‘வீட்டு வாசலுக்கு பென்ஷன் திட்டம்’ செயல்பபடுத்தப்பட்ட பின் மேலும் 3.52 லட்சம் பேர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.கலெக்டர்களின் கிராம தரிசனம் நிகழ்ச்சியின் போது அதிக அளவில் பென்ஷன் மற்றும் மாத உதவித்தொகை குறித்த மனுக்களே வருகின்றன. அதோடு ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் வரை, மாத உதவித்தொகை பெற தேர்வாகின்றனர்.இதை கவனத்தில் கொண்டு தான், வீட்டு வாசலுக்கு பென்ஷன், 72 மணி நேரத்தில் பென்ஷன் போன்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இதற்காக உதவி மையத்தில் சிறப்பு வசதிகள் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன் முறையாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement