Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 5-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110. 85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியா என்பது இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும்தானா?
இந்தியை மட்டுமே பேச வேண்டும் என்று அமித்ஷா கூறுகிறார். இந்தியா என்பது இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும்தானா? தமிழ்நாடு’ நம்பர் 1 மாநிலம் என்பதை எட்ட வேண்டும். துபாய், கேரளா, டெல்லி என எங்கு சென்றாலும் பாராட்டப்படும் அரசாக நமது அரசு இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக பாதாளத்தில் கிடந்த தமிழ்நாட்டை தலைநிமிர வைத்துள்ளோம் என்று செங்கல்பட்டு, மறைமலைநகரில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
Tamil News Live Updates
பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!
புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. ஷெபாஸ் ஷெரீப் வெற்றி பெற்று புதிய பிரதமர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Pakistan became an independent state in 1947; but the freedom struggle begins again today against a foreign conspiracy of regime change. It is always the people of the country who defend their sovereignty & democracy.
— Imran Khan (@ImranKhanPTI) April 10, 2022
இதற்கிடையே, ”பாகிஸ்தானில் 1947-க்கு பிறகு மீண்டும் வெளிநாட்டு சதிக்கு எதிரான சுதந்திர போராட்டம் தொடங்கியுள்ளது. நாட்டின் இறையாண்மை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பது மக்கள் மட்டுமே” என முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ட்வீட் செய்துள்ளார்.
வட இந்தியா, தென்னிந்தியா என்றில்லை.. ஏ.ஆர்.ரகுமான்
தமிழ் படங்களை போலதான் மலையாள படமும், மற்ற மொழி படங்களும். இதில் வட இந்தியா, தென்னிந்தியா என்றில்லை. என்னிடம் ஒரு சீனர் வட இந்தியர்கள் நல்ல நிறமாக இருப்பதாகவும், தான் வட இந்திய படங்களை விரும்பி பார்ப்பதாகவும் கூறினார். அது என்னை மிகவும் பாதித்தது. கருப்பாக இருப்பவர்களுக்கு சிறந்த கதாப்பாத்திரங்களைக் கொடுங்கள். நம் எல்லோருக்கும் நம் நிறம்தான் பிடிக்கும் என தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசியது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
பாகிஸ்தானில் பிரதமர் பதவிக்கு ஷாபாஸ் ஷெரீப் வேட்புமனுவை ஏற்றுக் கொண்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஷெரீப் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று இம்ரான் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ட்விட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை எலன் மஸ்க் அண்மையில் வாங்கிய நிலையில், ட்விட்டர் நிர்வாகக் குழுவில் எலன் மஸ்க் சேரமாட்டார் என்று ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் தகவல்!
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் இமானுவேல் மேக்ரான் 27.42% வாக்குகளும், மரின் லி பென், 24.92% வாக்குகளும் பெற்றுள்ளனர்!
நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி தொடர்ந்து 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், அமைச்சர்கள் அன்பில் மகேஷ், பொன்முடி ஆகியோர் பதிலுரை அளிக்கின்றனர். மத்திய பல்கலைகழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
அதேநேரம், ஆசிரியர் தகுதி தேர்வு, வினாத்தாள் கசிந்த விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் பைடனுடன், பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் பேச்சுவார்த்தை நடத்துகிறார். உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை பரிமாற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான 25 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கிறது.
கனமழை காரணமாக நாகையில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக பொது செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி ஓபிஎஸ், ஈபிஎஸ் தாக்கல் செய்த மனு மீது சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.