அஞ்சலகத்தின் இந்த 3 திட்டங்களில் எப்படி வங்கி கணக்கை இணைப்பது.. ரொம்பவே ஈஸி தான்..!

கடந்த ஏப்ரல் 1 முதல் அஞ்சலகத்தின் சில சேமிப்பு திட்டங்களில் வாடிக்கையாளர்கள் பெறும் வட்டி நேரடியாக கணக்கிற்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த வட்டி விகிதமானது பயனர்களின் அஞ்சல சேமிப்பு கணக்கு அல்லது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இரு பங்குகளை பரிந்துரை செய்யும் நிபுணர்கள்.. ஏன்!

அந்த வகையில் அஞ்சலகத்தின் மாதாந்திர வருமான திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், அஞ்சலகத்தில் டைம் டெபாசிட் திட்டங்களில் எப்படி வங்கிக் கணக்கினை இணைப்பது என்பதை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

வங்கிக் கணக்கினை எப்படி இணைப்பது?

வங்கிக் கணக்கினை எப்படி இணைப்பது?

ஒருவரின் சேமிப்பு கணக்கினை அஞ்சலகத்தின் டைம் டெபாசிட்டுடன் இணைக்க, டெபாசிட் செய்பவர் ECS படிவத்தினை, கேன்சல் செய்த காசோலையை இணைத்தும் அல்லது வங்கி கணக்கின் பாஸ்புக்கின் முதல் பக்கத்தினையும் கொடுக்கலாம். அதோடு MIS அல்லது SCSS அல்லது TDயின் பாஸ்புக்கினையும் இணைத்துக் கொடுக்க வேண்டும். இது அஞ்சலகத்தின் மூலம் ஆய்வு செய்யப்படும்.

அஞ்சலக சேமிப்பு கணக்கினை எப்படி இணைப்பது?

அஞ்சலக சேமிப்பு கணக்கினை எப்படி இணைப்பது?

அஞ்சலத்தின் சேமிப்பு கணக்குடன் இணைக்க அக்கவுண்ட் ஹோல்டர் SB – 83 என்ற படிவத்தினையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். ஆக நீங்கள் எதனுடன் இணைக்க வேண்டுமோ அந்த திட்டத்தின் MIS அல்லது SCSS அல்லது TDயின் பாஸ்புக்கினையும் இணைத்துக் கொடுக்க வேண்டும். இது அஞ்சலகத்தின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு இணைக்கப்படும்.

 அஞ்சலக திட்டங்களுக்கு வட்டி விகிதம்
 

அஞ்சலக திட்டங்களுக்கு வட்டி விகிதம்

பொதுவாக அஞ்சலக திட்டங்களை பொறுத்த வரையில் , வங்கி டெபாசிட் திட்டங்களை விட வட்டி விகிதம் அதிகம். குறிப்பாக அஞ்சலக சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு 7.6 சதவீதமாகவும், இதே மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 7.4% வட்டி விகிதமும், இதே பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு 7.1 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது. இதே நாட்டின் முன்னணி வங்கியான எஸ்பிஐ-யில் கூட வட்டி விகிதம் அதிக பட்சமாக 5.50 சதவீதமாக வழங்கப்படுகிறது.

 நம்பிக்கையான திட்டங்கள்

நம்பிக்கையான திட்டங்கள்

அஞ்சலக திட்டங்களை பொறுத்தவரையில் சந்தை அபாயம் இல்லாத பாதுகாப்பான, நம்பிக்கையான திட்டங்களாக பார்க்கப்படுகின்றன. தற்போது இந்த திட்டங்களில் இன்னும் மக்களின் ஆர்வத்தினை அதிகரிக்கும் விதமாக அஞ்சலகம் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகின்றது. இது மேற்கொண்டு அஞ்சலக திட்டங்களில் முதலீடுகளை அதிகரிக்க வழிவகுக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

how to link your bank account with MIS, SCSS and TD?

how to link your bank account with MIS, SCSS and TD?/அஞ்சலகத்தின் இந்த 3 திட்டங்களில் எப்படி வங்கி கணக்கை இணைப்பது.. ரொம்பவே ஈஸி தான்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.