சென்னை: அரசின் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களும் அகற்றப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று த பொதுப்பணிகள் & நெடுஞ்சாலைகள் துறை மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிது. இன்று காலை சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும், கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர், போலியான ஆவணங்களை பயன்படுத்தி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களை மீட்டெடுக்க அரசு முன்வருமா என கேள்வி எபப்பப்பட்டது,.
இதற்கு பதில் கூறிய எ வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் , தமிழக அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள கட்டிடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அங்கு தேவைப்படும் பொழுது அரசு கட்டடங்கள் கட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.