ரஷ்ய துருப்புகள், பொதுமக்கள் மற்றும் உக்ரேனிய வீரர்கள் என சுமார் 1700 பேரை சிறைப்பிடித்துள்ளதாக உக்ரைன் துணை பிரதமர் Iryna Vereshchuk தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து 48வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்ய, இனி பேச்சுவார்ததைக்காக படையெடுப்பை நிறுத்தப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் 1700 பேரை ரஷ்ய துருப்புகள் சிறைப்பிடித்துள்ளதாகவும், அவர்களில் 500 பேர் பெண்கள் என துணை பிரதமர் Iryna Vereshchuk தகவல் தெரிவித்துள்ளார்.
சிறைபிடித்துள்ள உக்ரேனியர்களை உட்கார விடாமல் நிற்க வைத்து சித்திரவதை செய்கின்றனர்.
அவர்களின் தலைகளை மொட்டையடித்து, தினமும் ஆடையை களைய சொல்லி கட்டாயப்படுத்தி சோதனை செய்கின்றனர்.
உக்ரேனியர்களுக்காக விமானங்களை அனுப்ப தயாராகும் ஜேர்மன் ஆயுதப்படை!
பலாத்காரம் பற்றிய உண்மைகள் எனக்குத் தெரியும், பலர் முதுகுத்தண்டில் அடித்து சித்திரவதை செய்யப்பட்ட காயத்தை நான் பார்த்தேன் என துணை பிரதமர் Iryna Vereshchuk தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, புச்சா நகரில் பொதுகமக்களை படுகொலை செய்து போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக ரஷ்ய மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தற்போது துணை பிரதமர் Iryna Vereshchuk சொன்ன தகவல்கள் உண்மை என நிரூபணமாகும் பட்சத்தில், ரஷ்ய மீதான மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கை மேலும் கடுமையாக வாய்ப்புள்ளது.