பொதுவாக எளிதாக கிடைக்கும் வெள்ளரிக்காய் நாம் விரும்பி உண்போம்.ஆனால் அந்த விதையில் உள்ள மருத்துவ குணங்கள் நாம் அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
இதில் ஏகப்பட்ட சத்துக்களும் மருத்துவ நன்மைகளையும் அடங்கியுள்ளது.
நார்ச்சத்து, மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற பல சத்துக்கள் வெள்ளரி விதையில் உள்ளன.
இது குறிப்பாக சிறுநீரக பிரச்சினைக்கு பெரிதும் உதவுகின்றது. தற்போது இதில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- வெள்ளரி விதையுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து தொப்புளைச் சுற்றி பற்றுப்போட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
- சிறுநீர் பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளரி விதையுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து தொப்புளைச் சுற்றி பற்றுப்போட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
- வெள்ளரி விதைகள் சரும வறட்சியைப் போக்கி, சருமத்தைப் பளபளப்பாக மாற்றவும், முடி வளர்ச்சிக்கும் உதவும்.
- வெள்ளரி விதையை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் அடைப்பு, சதை அடைப்பு, சிறுநீர்க் குழாய் எரிச்சல் போன்றவை குணமாகும். புற்றுநோயைத் தடுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
- பித்தநீர் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வாக வெள்ளரி விதை செயல்படுகிறது.
- வெள்ளரி விதையை அரைத்து சருமத்தில் தேய்த்து குளித்தால் முகம் பளபளப்பாகும்.