வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திப்ரூகர்: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘டோர்னியர்’ விமானத்தின் முதல் பயணியர் சேவை, துவங்கியது.
பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், ‘டோர்னியர் 228’ வகை விமானங்களை தயாரிக்கிறது. 17 பேர் செல்லக் கூடிய இந்த விமானம், இதுவரை ராணுவ சேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ‘அலையன்ஸ் ஏர்’ நிறுவனம், இரு டோர்னியர் விமானங்களை குத்தகைக்கு பெற ஒப்பந்தம் செய்தது. அதன்படி, முதல் விமானம், இந்நிறுவனத்திற்கு சில தினங்களுக்கு முன் வழங்கப்பட்டது. இந்த விமானத்தின் பயணியர் சேவை, முதன் முறையாக துவங்கியது.
அசாம் மாநிலத்தின் திப்ரூகரில் இருந்து, அருணாச்சல பிரதேசத்தின் பசிகட் நகருக்கு சென்ற இந்த விமானத்தில், மத்திய அமைச்சர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ மற்றும் அரசு அதிகாரிகள் பயணம் செய்தனர். ‘வரும், 18ம் தேதி முதல், திப்ரூகர் – பசிகட் – லிலாபரி – திப்ரூகர் இடையிலான விமான சேவை தினசரி நடக்கும்’ என, அலையன்ஸ் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement