ஆந்திர மாநில முதல்வராக கடந்த 2019-ம் ஆண்டு மே 30-ம் தேதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றார். அப்போது 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்ற னர். இரண்டரை ஆண்டுக்கு பிறகுபுதிய அமைச்சர்கள் நியமிக்கப்படு வார்கள் என்று ஜெகன் மோகன் அறிவித்திருந்தார்.
அதன்படி 3 ஆண்டுகள் நெருங்குவதால், அமைச்சர்கள் அனைவரும்ராஜினாமா செய்தனர். இதையடுத்து பழைய அமைச்சரவையில் இருந்து 11 பேரும், புதிதாக 14 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். புதிய அமைச்சர்கள் பட்டியலில், சித்தூர் மாவட்டம், நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ஆர்.கே.ரோஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர்கள் பதவியேற்பு விழா, அமராவதி வெலகபுடி பகுதியில் உள்ள தலைமைச் செயலக வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது. 25 அமைச்சர்களுக்கும் ஆளுநர் பிஸ்வ பூஷண் ஹரிசந்தன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்ற பிறகு ரோஜா, மேடையில் இருந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் காலை தொட்டு கும்பிட்டு, கையை முத்தமிட்டு தனது நன்றியை தெரிவித்தார். அவர் முதல் முறையாக அமைச்சரவையில் இடம்பெற் றுள்ளார்.
புதிய அமைச்சரவையில் ரோஜாஉட்பட 4 பெண்களுக்கு வாய்ப்புஅளிக்கப்பட்டுள்ளது. 5 பேர் துணை முதல்வர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் பதவிகிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தவர்களின் ஆதரவாளர்கள் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சினிமாவில் நடிக்க மாட்டேன்
புதிய அமைச்சராக பதவியேற்ற ரோஜாவுக்கு சுற்றுலா, இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் ரோஜா கூறும்போது, “எனக்கு அமைச்சர் பதவி வழங்கிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர் ஆவேன் என கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் என் மீது வைத்துள்ள நம்பிக்கையால் அமைச்சர் பதவி வழங்கியுள்ளார். எந்தப் பதவி வகித்தாலும் அதில் எனது திறமையை நிரூபிக்க முனைவேன். இனி மக்கள் பணியாற்றவே நேரம் தேவைப்படும் என்பதால் இனி சினிமாவிலும் தொலைக் காட்சியிலும் நடிப்பதை நிறுத்திவிட முடிவு செய்துள்ளேன்” என்றார்.