சென்னை : அடுத்த 3 மணி நேரத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் தென்மேற்கு வங்கக் கடலில் தமிழகக் கடற்கரை, குமரிபகுதி, மன்னார் வளைகுடாவை ஒட்டிய பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும். குறிப்பிட்ட காலப்பகுதியில் மீனவர்கள் மேற்கண்ட கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.