இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடிக்கான காரணத்தை வெளியிட்ட உலக புகழ் பெற்ற பொருளாதார நிபுணர்



இலங்கை மக்களின் வாழ்க்கைச் செலவு எவ்வாறு தாங்கமுடியாத அளவு அதிகரித்துள்ளது என்பதை உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியருமான ஸ்டீவ் ஹெங்க் விளக்கியுள்ளார்.

இலங்கையில் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதாகவும், உணவு இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2019 ஆம் ஆண்டிலிருந்து பொருட்களின் விலைகள் எவ்வாறு உயர்ந்துள்ளது என்பதற்கான விளக்கப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவரது டுவிட்டர் பதிவில், “உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு இலங்கை முழுவதும் அமைதியின்மையை தொடர்ந்து உருவாக்குகிறது. நிலைமையை மோசமாக்கும் வகையில், பல அடிப்படைத் தேவைகளின் விலை 2019 ஆண்டு முதல் உயர்ந்துள்ளது, மேலும் இலங்கை ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.