ஈஸ்டர் பண்டிகையை வரவேற்கும் விதமாக லிதுவேனியா நாட்டில் உள்ள மழலையர் பள்ளியில் ஆயிரக்கணக்கான ஈஸ்டர் முட்டைகளால் மரங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
செடுவா நகரில் உள்ள அந்த மழலையர் பள்ளியில் 12 ஆண்டுகளாக இந்த வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு 11,000 ஈஸ்டர் முட்டைகளால் அங்குள்ள மரங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
வாத்து மற்றும் கோழி முட்டைகள் மீது பல்வேறு வண்ணங்களை பூசி, பளபளக்கும் பாசி மணிகளால் அலங்கரித்து இந்த ஈஸ்டர் முட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.