உக்ரைனில் செய்த அட்டூழியம் போதாதென, தற்போது மற்றொரு நாட்டை நோக்கி தனது இராணுவத்தை அனுப்பியிருக்கிறார் ’சர்வாதிகாரி’ புடின்!
அந்த நாடு பின்லாந்து…
சமீபத்தில், நேட்டோ அமைப்பில் இணைவது குறித்து பின்லாந்து பிரதமரான Sanna Marin பேசியிருந்தார். தனது அரசு நேட்டோ அமைப்பில் இணைவது தொடர்பாக விவாதித்து வருவதாகவும், கோடையின் மத்தியப்பகுதிவாக்கில் நேட்டோ அமைப்பில் இணைவது குறித்த அந்த விவாதம் முடிவுக்கு வர இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் Marin.
சமீபத்தில் பின்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள், பின்லாந்து நாட்டவர்களில் 84 சதவிகிதம் பேர் ரஷ்யாவை ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக பார்ப்பதாக தெரிவித்துள்ளன.
இந்நிலையில், நேட்டோ அமைப்பில் இணைவது தொடர்பாக பின்லாந்து பிரதமரான Sanna Marin பேசியதைத் தொடர்ந்து, ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரான Vladimir Dzhabarov, பின்லாந்தின் இந்த முடிவு நாட்டின் அழிவுக்குத்தான் வழிவகுக்கும் என எச்சரித்திருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில்தான், பின்லாந்தை மிரட்டுவதற்காக புடின் தனது இராணுவத்தை பின்லாந்தை நோக்கி அனுப்பியுள்ளதாக கருதப்படுகிறது.
வெளியாகியுள்ள உறுதி செய்யப்படாத வீடியோ ஒன்றில், நேற்று இரவு, ரஷ்ய கரையோர பாதுகாப்பு ஏவுகணை வீசும் வாகனங்கள் இரண்டு, ரஷ்ய எல்லையிலிருந்து பின்லாந்தின் தலைநகரான Helsinki நகரை நோக்கிச் செல்லும் சாலையில் செல்வதைக் காணலாம்.
இதுவரை, ரஷ்யாவைப் பகைத்துக்கொள்ளவேண்டாம் என்பதற்காக நேட்டோ அமைப்பில் இணைவதைத் தவிர்த்து வந்தது பின்லாந்து. ஆனால், ரஷ்யாவுடன் 830 மைல் தூர எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் அந்நாடு, புடின் உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, தற்போது நேட்டோ அமைப்பில் இணைய திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில், பின்லாந்தைத் தொடர்ந்து, நேற்று, ஸ்வீடன் நாடும் நேட்டோ அமைப்பில் இணைவது தொடர்பாக முறைப்படி விவாதம் ஒன்றைத் துவங்கியுள்ளது.
ஸ்வீடன் ஆளுங்கட்சியின் தலைவரான Tobias Baudin இது குறித்துக் கூறும்போது, ரஷ்யா உக்ரைனை ஊடுருவியபோதே ஸ்வீடன் நாட்டின் பாதுகாப்பான நிலையின் அடிப்படையிலேயே மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார்.