உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டின் கிழக்கு பகுதி நகரான கிராமடோர்ஸ்க் ரயில் நிலையத்தில் ரஷ்ய படைகள் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளன.
தாக்குதலுக்குப் பிறகு அங்கிருந்த காட்சியை உக்ரைனின் பாதுகாப்புதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கிராமடோர்ஸ்க் நகரிலிருந்து வெளியேறுவதற்காக ரயில் நிலையத்தில் காத்து கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள் மீது ரஷ்யா போர் விதிமுறைகளை மீறி தாக்குதல் நடத்தி இருப்பதாகவும், இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.