எகிறி அடிக்கும் தங்கம் விலை.. இனியும் அதிகரிக்கலாம்.. நிபுணர்களின் கவலையளிக்கும் கணிப்பு!

தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் இன்றும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது சாமானியர்கள் வாங்க சரியான தருணமா? இனியும் விலை அதிகரிக்குமா?

சர்வதேச சந்தையில் தற்போதைய நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? டெக்னிக்கலாக எப்படி உள்ளது? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

2வது நாளாகச் சரியும் சென்செக்ஸ்.. அதானி கிரீன் 9% உயர்வு..!

எகிறியடித்த தங்கம் விலை

எகிறியடித்த தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்றே ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. டெக்னிக்கலாக பார்க்கும்போது இன்னும் சற்று ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. நிபுணர்களும் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1970 டாலர்களை உடைக்கலாம் என்று கூறியுள்ளனர்.

முக்கிய லெவல்

முக்கிய லெவல்

தங்கத்தின் முக்கிய லெவல் ஆக 1950 மற்றும் 1970 டாலர்களாக உள்ளது. இதே சப்போர்ட் லெவல் 1930 டாலர்களாகவும் கணித்துள்ளனர். எனினும் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் 2000 டாலர்களை தொடலாம் என்றும் கணித்துள்ளனர். சந்தையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும், சந்தை எப்போது வேண்டுமென்றாலும் சரிவினைக் காணலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது. ஆக அப்படி சரியும் பட்சத்தில் நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவும் பார்க்கப்படுகிறது.

டாலர் மதிப்பு உச்சம்
 

டாலர் மதிப்பு உச்சம்

அமெரிக்க டாலரின் மதிப்பானது 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இது மற்ற கரன்சிதாரர்களுக்கு தங்கத்தினை விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது. இதனால் தங்கத்தில் முதலீடுகள் குறைய இது காரணமாக அமையலாம். இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பத்திர சந்தை

பத்திர சந்தை

அமெரிக்க பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகுத்துள்ளன. இவற்றோடு சர்வதேச பங்கு சந்தைகளும் இன்று சரிவில் காணப்படும் நிலையில், அதுவும் தங்கத்திற்கு முதலீடுகளை மாற்ற வழிவகுத்துள்ளது.

பணவீக்கம்

பணவீக்கம்

அமெரிக்காவின் பணவீக்கம் தொடர்பான தரவானது வெளியாகவிருக்கும் நிலையில், அது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நுகர்வோர் விலை குறியீடானது மார்ச் மாதத்தில் 0.47% அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கோல்டுமேன் சாச்சஸ் அறிக்கையானது 20 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 6.6% ஆக அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

வட்டி விகிதம் அதிகரிப்பு

வட்டி விகிதம் அதிகரிப்பு

எனினும் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் வட்டி விகிதம் இந்த முறை கட்டாயம் பெரியளவில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடும். எனினும் இது குறித்தான முக்கிய முடிவுகளையும் முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அதேசமயம் ரஷ்யா – உக்ரைன் இடையேயானது பதற்றமானது அதிகரித்து வரும் நிலையில், இது சர்வதேச அளவில் பணவீக்கத்தினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பணவீக்கத்துக்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கத்திற்கு சாதகமான அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவையினை ஊக்குவிக்கலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸுக்கு 11.30 டாலர்கள் அதிகரித்து, 1959.60 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 1.65% அதிகரித்து, 25.402 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. இதற்கிடையில் வெள்ளி விலை சற்று ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்தவரையில், தங்கம் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 386 ரூபாய் அதிகரித்து, 52,565 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. எப்படியிருப்பினும் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

வெள்ளியின் விலையானது இந்திய சந்தையில் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 931 ரூபாய் அதிகரித்து, 68,225 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலை, குறைந்த விலையையும் உடைக்கவில்லை. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது சென்னையில் கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து, 4956 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 39,648 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து, 5406 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 43,248 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 54,060 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது அதிகரித்தே காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 60 பைசா அதிகரித்து, 72.90 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 729 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 600 ரூபாய் அதிகரித்து, 72,900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

சர்வதேச தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.எனினும் நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கம்,டாலர் மதிப்பு, பத்திர சந்தை, ரஷ்யா – உக்ரைன் பேச்சு வார்த்தை உள்ளிட்ட பல காரணிகள் விலையில் முக்கிய மாற்றத்தினை ஏற்படுத்தலாம். இதே ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on April 12th, 2022: gold prices may break $1970 per ounce

gold price on April 12th, 2022: gold prices may break $1970 per ounce/எகிறி அடிக்கும் தங்கம் விலை.. இனியும் அதிகரிக்கலாம்.. நிபுணர்களின் கவலையளிக்கும் கணிப்பு!

Story first published: Tuesday, April 12, 2022, 11:43 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.